கடவுளை படைத்தது யார்? உலகத்தை படைக்க முன் அவர் எங்கே இருந்தார்?
------------------------------------------------கடவுளை படைத்தது யார்? அவர் ஆரம்பத்தில் எங்கே இருந்தார் என்பன நாத்திகர்களால் கேட்கப்படும் கேள்விகளில் மிக முக்கியமானவையாக உள்ளன.
1.கடவுளை படைத்தது யார்?
உலகத்திலுள்ள எந்த ஒன்றுமே தானாக உண்டாகியிருக்க முடியாது
பூமி மனிதர்கள் வாழும் விதமாக உண்டாக்கப்பட்டுள்ளது
ஒவ்வொன்றும் துள்ளியமாக இயங்குகின்றன.
ஏன், மனித உடலிலுள்ள உறுப்புகள் கூட அதிசயமாக குறிப்பிட்ட விதத்தில் இயங்குகின்றன.. அதே போன்றே மற்ற உயிர்களும் உள்ளன.
இவை அனைத்தும் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருப்பதை துல்லியமாக உணர முடிகிறது.
ஆரம்பத்தில், பெருவெடிப்புக்கு முன்னால், ஹிக் போஸோன் துகள் இருந்துள்ளது.
அதுவே வெடித்து இப்போதுள்ளது போல அண்டம் உண்டானதாக நாத்திகர்கள் நம்புகிறார்கள்.
இந்த ஹிக் போசோன் தானாக உண்டாகியிருக்க முடியாது.
இவ்வாறு தான் வெடித்து பின் உயிர்கள் தோன்றவேண்டும் என அத்துகளால் தீர்மானிக்க முடியாது!
ஏனெனில் , அந்த ஹிக் போசோன் program செய்யப்பட்டுள்ளதே அன்றி, அது programmer அல்ல.
இதை சரியாக ஒரு உதாரணத்தில் சொல்வதானால்,
ஒரு ரோபோவை ஹிக் போசோன் துகளுக்கு உவமையாக கூறலாம்.
ரோபோவை ஒருத்தர் உண்டாக்கி, அதற்கு coding செய்து program பண்ணி அதை இயக்கவோ அல்லது தானாக இயங்கவைக்கவோ செய்யப்படுகிறது.
அதேபோன்று தான், ஆரம்பத்தில் இருந்த ஹிக் போசோன் துகள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் மிகச்சிறந்த ஞானமிக்க programmer மற்றும் மிக நுண்ணிய படைப்பாளரால் அது உண்டாகியிருக்க வேண்டும் என நாம் கூறுகிறோம்.
இதை சாதாரண அறிவு உள்ள ஒருவராலும் புரிந்து கொள்ள இயலும்.
அப்படியானால் , கடவுளை படைத்தது யார்??:
கடவுளென்பவர் program செய்யப்பட்டவர் அல்ல..
அவர் தன் விருப்பத்தின்படி நடப்பவர்.
மிக பயங்கர சக்தி மிக்கவர்.
அவர் என்றென்றும் நிலையாக இருந்தவர், இருப்பவர்.!
அப்படிப்பட்ட ஒருவர் படைக்கபட்டார் என்று கூறுவதே அபத்தமாகும்!!
இந்த கேள்வியே லாஜிக் அற்றது ஆகும்.
உதாரணமாக,
*சேவல் முட்டையிட்டால், என்ன நிறமாக இருக்கும்?
*பூரண ஆணொருவன் பிள்ளை பெற்றால், என்ன பாலில் குழந்தை பிறக்கும்?
இதுபோன்ற அர்த்தமற்ற லாஜிக் இல்லாத கேள்வியே இது.
ஏனெனில் கடவுள் என்றாலே படைக்கப்படாமல், என்றென்றும் நித்தியமாக இருப்பவர் , அவரே சகலதையும் படைப்பவராக இருப்பார்.
அப்படிப்பட்டவரை படைத்தவர் யார் என கேட்பது , கடவுளின் வரைவிலக்கணத்திற்கே முரண் ஆகும்.
ஏனெனில் அவர் படைக்கப்பட்டிருந்தால், அவரை படைத்தவர் தான் கடவுளாக ஆவார். மாறாக படைக்கப்பட்ட இவர் ஆக மாட்டார்!
ஆனால் ஹிக் போசோனை இதற்கு ஈடாக கருத முடியாது.. ஏனெனில் அது ப்ரோக்ரமர் அல்ல.. மாறாக ப்ரோக்ராம் செய்யப்பட்ட துகள் ஆகும்!!
------------------
2.படைக்க முன்பு கடவுள் எங்கே இருந்தார்?:
இது பெரிய யோசிக்க வேண்டிய அளவுக்கு உண்டான ஒன்றே இல்லை!
இவர்கள் புரியும் விதமாகவே கேட்பதானால்,
பெருவெடிப்புக்கு முன்,
ஹிக் போசோன் துகள் எங்கே இருந்தது???
அது வெடித்தி சிதறி பெரு நட்சத்திரங்களெல்லாம் உண்டகிவிட்டன.
இன்னும் அண்டம் விரிவடைந்துகொண்டே செல்கிறது.
இத்தனைக்கும் எப்படி இடம் கிடைத்தது??
இவற்றுக்கு என்ன பதில் சொல்லலாம்??
இடம் என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தி கூற முன்பு, "எங்கே இருந்தார்? எங்கே உண்டானது?" என்ற கேள்விகள் அபத்தமாகும்.!
வெற்றிடம் அளவில்லாமல் இருக்கிறது.. அதனால் தான் ஹிக் போசானால் இன்னும் வெடித்ததின் வெளிப்பாட்டால் இன்னும் விரிவடைகிறது.
ஆனால் அது அண்டத்திற்கு வெளியில் அலுப்பதால், அவ் இடத்திற்கு வரைவிலக்கணம் கொடுக்கவில்லை!
அப்படியிருக்க இக்கேள்வி அபத்தமானது ஆகும்.
காரணம் வரைவிலக்கணம் கொடுக்கப்படாத இடம் நிறையவே இருந்துள்ளது.
*கடவுள் படைக்க முன்பு என்ன பண்ணிட்டிருந்தார.??:
நேரம் என்ற ஒன்றை வரைவிலக்கணப்படுத்தவே இல்லாத காலத்தில், " அதற்கு முன்பு" என்ற ஒன்றை கூறவே இயலாது.
இறைவன் தான் காலத்தை விதித்தவன். அவன் விதிக்க முன்பு காலம் என்பது இல்லை.
அது undefined!!
ஆகவே இதுவும் அர்த்தமற்றது
No comments:
Post a Comment