Friday, March 13, 2020

கடவுள் இல்லை எனில் தப்பு என்பதே இல்லை

கடவுள் இல்லை எனில் தப்பு/பாவம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை!!

-------

தர்க்கவியலை பயன்படுத்தி எது கூடாது எது கூடும் என பார்க்க இயலாது.

1. பாலியல் உறவு:

*ஓரின சேர்க்கை செய்வது செய்பவனின் உரிமை என்பார்கள்.

அதை தப்பு என எந்த நாத்திகராலும் நிரூபிக்க இயலாது.

ஏனெனில் ஒரு மனிதன் யார் மேல் ஈர்ப்பு கொள்கிறான் என்பது அவனாக தேர்ந்தெடுப்பது அல்ல.

ஒரு ஆண் இன்னொரு ஆணில் ஈர்ப்பை கண்டால், நாத்திகர்களால் அவனை குறை சொல்லவோ தடுக்கவோ இயலாது.

*அதேபோன்று ஒரு மனிதன் தன் சொந்த தாயிடமோ , மகளிடமோ பாலியல் ஈர்ப்பை காண்பானாயின்,  அதை நாத்திகரால் குறைசொல்லவோ தடுக்கவோ இயலாது.

*ஒருவன் சிறு குழந்தையை பார்த்து காமம் கொள்கிறான், இன்னொருவன் மிருகத்தை பார்த்து காமம் கொள்கிறான்.

இவையெல்லாம் ஹோர்மோன்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது என கற்றவர்கள் அறிவார்கள்.

அப்படியிருக்க நாத்திகர்களால், இம்முறைகேடான பாலியல் கலவிகளை தவறு என கூற இயலாது.!!

அதை அவனவன் சுதந்திரம் ,ஹோமோன் என்றே சமாளிக்க வேண்டும்!!

ஒருவன் ஈர்க்கப்பட்ட விசயத்தை செய்வதை தடுக்க நாம் யார் என தத்துவம் பேசுவர்.

2.கொலை:

*நாத்திகர்கள் சாப்பாட்டிற்காக மாட்டை,ஆட்டை,கோழியை,மீனை,செடிகளை கொல்வார்கள்.

*நுளம்பை கொல்வார்கள்.

*நுண்ணுயிர்களை கொல்வார்கள்

*பாம்பு, தேள் ஆகியவற்றை கொல்வார்கள்.

இவைகளெல்லாம் உயிர் தானே!!

அப்படியென்றால், மனிதனிடம் இருப்பதும் அதே உயிர் தானே.

அப்படியெனில் மனிதனை ஏன் கொல்ல கூடாது???

தர்க்கவியலாலும் , அறிவியலாலும் நிரூபிக்க முடியுமா??

*மனிதன் சமூக விலங்கு என்பதால், தனக்கு தொல்லையாக இருக்கும் சக மனிதரையோ, சக கூட்டங்களையோ கொல்லலாமா?

தப்பு எனின், மற்ற உயிர்களையும் கொல்லாது செத்துப்போகலாம்!

மனிதனை சாப்பாட்டுக்காக கொல்லலாமா??

இவற்றுக்கெல்லாம் நாத்திகத்தால் பதில் தர இயலாது.

நாத்திகத்தில் ஒழுக்கம், விதிகள் என எதுவும் இல்லை!!

எல்லாமே கற்பனை!!

ஒருவரின் சிந்தனை இன்னொருவருக்கு மாற்றமாக இருக்கும்.

இவற்றை தப்பு என கூற ஒரே ஒருவனாலேயே முடியும்!!

அவன் தான் இறைவன்.!!

தன் படைப்பை பற்றியும் , அவை இருக்க வேண்டிய முறைபற்றியும் மிக அறிந்தவன்.



3.நல்லவனாக வாழ்வதும் கெட்டவனாக வாழ்வதும்:

உலகில் கெடுதிகள் செய்பவர் நன்றாக வாழ்கிறார்கள். நல்லவர்கள் துன்ப படுகிறார்கள்.

கொலைகள் செய்பவன் கூட நன்றாக வாழ்கிறான். நல்லதை செய்கிறவர்கள் துன்ப படுகிறார்கள்.

கடவுள் இல்லை எனின்,

நல்லவனாக வாழ்வதில் அர்த்தமே இல்லை!!

கெட்டவனாக வாழ்வதே சிறப்பு!



அநீதி இழைக்கப்பட்டு இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி, கடவுள் இருந்தால் மட்டுமே சாத்தியம்!

No comments:

Post a Comment